வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 15 ஜூன் 2016 (11:51 IST)

புனித் ராஜ்குமாருக்கு அப்பாவாக நடிக்கும் சரத்குமார்

புனித் ராஜ்குமாருக்கு அப்பாவாக நடிக்கும் சரத்குமார்

வில்லனாக நடிக்க மாட்டேன் என்று தமிழில் அடம்பிடிக்கும் சத்யராஜ் தெலுங்குப் படத்தில் வில்லனாக நடித்தார். 


 
 
அதேபோல் நாயகன் கனவிலிருக்கும் சரத்குமாரும் கன்னட படத்தில் நாயகனின் தந்தையாக நடித்துள்ளார்.
 
இதற்குமுன் ஜக்குபாய் படத்தில் ஸ்ரேயாவின் தந்தையாக சரத்குமார் நடித்திருக்கிறார். அதேபோல் அவர் தந்தையாக நடித்துள்ள பல படங்களில், படத்தின் நாயகனாகவும் சரத்குமாரே இருந்திருக்கிறார். ஆனால் கன்னட படத்தில் அப்படியல்ல.
 
ராஜகுமாரா என்ற கன்னட படத்தில் புனித் ராஜ்குமார் நாயகன். அவரது தந்தையாக முக்கியமான வேடத்தில் சரத்குமார் நடிக்கிறார். இந்தப் படத்தில் நாயகியாக ப்ரியா ஆனந்த் நடித்து வருகிறார்.