Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அஜித்தைப் பழிவாங்குகிறதா தயாரிப்பாளர்கள் சங்கம்?

CM| Last Updated: செவ்வாய், 13 மார்ச் 2018 (18:28 IST)
அஜித் – சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘விஸ்வாசம்’. டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தை, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. ‘ஆரம்பம்’ படத்துக்குப் பிறகு அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா.
 
தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு என 3 காமெடியன்கள் இந்தப் படத்தில் கமிட்டாகியுள்ளனர். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் 23ஆம் தேதி தொடங்கும் என கூறப்பட்டது. அதற்காக செட் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஷூட்டிங் தொடங்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
 
காரணம், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், ‘23ஆம் தேதி முதல் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் படங்களின் ஷூட்டிங்கும் ரத்து செய்யப்படும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் தேதியில் இருந்து இது அறிவிக்கப்பட்டுள்ளதால், திட்டமிட்டு அஜித்தைப் பழிவாங்குகிறதா தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற கேள்வி எழுந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :