1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Updated : வியாழன், 8 ஜூன் 2017 (13:08 IST)

சிறிய படங்களின் தோல்வியைத் தவிர்க்க தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய திட்டம்

சிறிய படங்களின் தோல்வியைத் தவிர்ப்பதற்காக, தயாரிப்பாளர்கள் சங்கம் புது முயற்சியைக் கையில் எடுத்துள்ளது.


 


குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் ஆவதாக பல நாட்களாக விளம்பரம் செய்யப்பட்டு வரும் ஒரு படம் திடீரென தேதியைத் தள்ளி வைப்பதும், எந்த அறிவிப்புமே இன்றி திடீரென ஒரு படம் ரிலீஸாவதும் தமிழ் சினிமாவில் காலம் காலமாக நடப்பதுதான். இதனால் பாதிக்கப்படுவது, சிறு படங்களின் தயாரிப்பாளர்கள்தான். திடீரென ஒரு பெரிய பட்ஜெட் படம் ரிலீஸாகும்போது, இவர்களுக்கு குறைவான தியேட்டர் கிடைப்பதுடன், சிறிய படங்கள் ரிலீஸானதே தெரியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகின்றன. எனவே, இதை முறைப்படுத்த, முன்கூட்டியே ரிலீஸ் தேதியைப் பதிவுசெய்ய வேண்டும் என்பதைக் கொண்டு வந்துள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம்.

இதுகுறித்துப் பேசிய சங்கத்தின் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, “பெரிய பட்ஜெட் படங்களின் தேதியைத் தெரிந்து கொண்டால், சிறிய படங்களின் ரிலீஸை திட்டமிட்டுக் கொள்ளலாம். அதேபோல், பெரிய பட்ஜெட் படங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் ரிலீஸாகும்போதுதான், சிறிய பட்ஜெட் படங்கள் ரிலீஸாவதற்கு தியேட்டர்கள் கிடைக்கும். தயாரிப்பாளர்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கும்” என்றார்.