என்னை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர் - ராதிகா ஆப்தே பேட்டி

Radhika Apte
Murugan| Last Updated: புதன், 11 அக்டோபர் 2017 (16:26 IST)
தயாரிப்பாளர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பேட்டியளித்து நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 

 
பாலிவுட்டில் நடிகைகளை படுக்கைகளு அழைப்பது என்பது மிகவும் அதிகம் என கங்கனா ரனாவத் உள்ளிட்ட பல நடிகைகள் புகார் கூறியுள்ளனர். அதேபோல், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய திரையுலகிலும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது சகஜமான ஒன்று பல நடிகைகள் வெளிப்படையாக புகார் கூறினர்.
 
அதோபோல், தோனி,  கபாலி உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. மேலும், பாலிவுட்டில் அரை நிர்வாணமாக இவர் நடித்துள்ள வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 
 
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் “தென்னிந்திய பட உலகிலும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது உண்மைதான். நான் ஒரு முறை ஒரு தயாரிப்பாளரை சந்தித்தேன். படம் தொடர்பாக அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, அவர் திடீரென என்னை படுக்கைக்கு அழைத்தார். இதனால் நான் அதிர்ச்சியானேன். அவருக்கு நான் உடன்படவில்லை. அதனாலேயே எனக்கு தென்னிந்திய படங்களில் வாய்ப்புகள் வரவில்லை என நினைக்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.


webdunia

இதில் மேலும் படிக்கவும் :