ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (10:44 IST)

ஒவ்வொரு டிக்கெட் விலையிலிருந்து ஒரு ரூபாய் விவசாயிகளுக்குதான்: விஷால் அறிவிப்பு!

கடந்த 2ம் தேதி திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றனர். 


 
 
தொடர்ந்து ராகவேந்திரா மண்டபத்தில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது.
 
நிகழ்ச்சியில் பேசிய விஷால் இன்றிலிருந்து தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்குகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகள் தயாரிப்பாளர் நலனுக்காக 24 
 
மணிநேரமும் உழைப்போம். 60 வயதுக்கு அதிகமான தயாரிப்பாளர்களுக்கு ஓய்வூதியம் 12500 வழங்கப்படும். திருட்டு விசிடி மற்றும் ஆன்லைன் பைரசியை தடுக்கச் மிஷ்கின் தலைமையில் தனி கமிஷன் அமைக்கப்படும்.
 
விவசாயிகள் நலனுக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில், தமிழகத்தில் திரையிடப்படும் ஒவ்வொரு படத்தின் அனைத்து காட்சிகளில், ஒவ்வொரு டிக்கெட் விலையில் இருந்து ஒரு ரூபாய் விவசாயிகளுக்காக ஒதுக்கப்படும். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு விஷால் பேசினார்.