வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 2 நவம்பர் 2023 (20:52 IST)

கேப்டன் மில்லர் படத்தின் புதிய அப்டேட் வெளியிட்ட பிரியங்கா மோகன்

captain Miller
கேப்டன் மில்லர் படத்தில்  தன் டப்பிங் பணியை தொடங்கியுள்ளதாக பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வைரலானது.

இப்படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வரும் நிலையில்  அடுத்த அப்டேட் எப்போது வெளியயாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சமீபத்தில் கேப்டன் மில்லர் படத்தின் தனது காட்சிகளுக்கான டப்பிங்கை இரண்டே நாட்களில் தனுஷ் பேசியதாகத் தகவல் வெளியானது.

இந்த  நிலையில், இப்படத்தின் தன் டப்பிங் பணியை தொடங்கியுள்ளதாக பிரியங்கா மோகன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கில்லர் கில்லர் எனப் பதிவிட்டு, இப்புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.