புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 4 மார்ச் 2021 (07:55 IST)

சமூகவலைதளத்தில் எல்லை மீறிய மர்மநபர்… நெத்தியடி கேள்வி கேட்டு ஆஃப் செய்த பிரியா வாரியர்!

நடிகை பிரியா வாரியரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மர்ம நபர் ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாசமான கமெண்ட்களை இட்டு வருகிறார்.

ஒரே ஒரு பாடலில் உலக முழுக்க பேமஸ் ஆன மலையாள நடிகை பிரியா வாரியர் ஒரு அடார் லவ் என்ற படத்தில் அவரின் கண்ணசைவின் அழகில் சொக்கிப்போன இளைஞர்கள் இங்கு ஏராளம். மலையாள இயக்குநர் ஓமர் லூலு இயக்கிய 'ஒரு அடார் லவ்'. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த படம் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்தது. ஆனாலும் பிரியாவின் புகழ் குறையவில்லை. இப்போது அவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை பிரியா தன்னுடைய ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மேலும் ரசிகர்களின் கமெண்ட்களுக்கும் அவ்வப்போது பதில் அளித்து வருகிறார். இந்நிலையில் எல்லை மீறி ஆபாசமாக பேசிய ரசிகர் ஒருவரிடம் ‘ஏப் பேக் ஐடியில் வந்து பேசுகிறாய்? உனக்குத் தைரியம் இல்லையா?’ என அவர் பாணியிலேயே பதிலளித்துள்ளார்.