1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 22 ஜூன் 2021 (15:14 IST)

லுங்கிடா டேய்.... நான் பேசுறத கவனிடா முட்டாப்பயலே - கிண்டலுக்கு பிரியா பவானி பதிலடி!

தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். ஒரு காலத்தில் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்த நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது குருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் மித்ரா என்ற குழந்தை ஸ்பைனல் மஸ்குலர் அட்ரொபி என்ற அறிய நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி அவரது சிகிச்சைக்கு தேவைப்படும் பல கோடி பணத்தில் உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் என வீடியோ வெளியிட்டிருந்தார். 

ஆனால், சிலர் அவர் அணிந்திருக்கும் பேண்ட்டை லுங்கி என கூறி கிண்டல் கமெண்ட்ஸ் அடித்தனர். அதற்கு பதிலடி கொடுத்துள்ள பிரியா பவானி ஷங்கர்,  " சாதாரண பதிவில் உங்களை விட நான் கிண்டலாக பேசுவேன். இந்த வீடியோவில் எவ்வளவோ விஷயம் இருக்கிறது. அதை எல்லாம் விட்டுவிட்டு உங்களுக்கு என் ஆடை தான் தெரியுதா? வாவ் என்று பதிலடி கொடுத்து ஆப் செய்துவிட்டார்.