வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 4 மே 2021 (11:10 IST)

தேடி கண்டுபிடிச்ச மாதிரி இதுல என்ன பெருமை? – நெட்டிசனை கிழித்த ப்ரியா பவானி சங்கர்!

தமிழ் நடிகை ப்ரியா பவானி சங்கரை திராவிட கட்சி ஆதரவாளர் என பழைய ட்வீட்டை எடுத்து காட்டிய நபருக்கு ப்ரியா ட்வீட் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் அறிமுக நாயகியாக புதிய படங்களில் ஒப்பந்தமாகி வருபவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். பத்திரிக்கையாளராக தனது பணியை தொடங்கியவர், பின்னர் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். பின்னர் சின்னத்திரை நாடகங்களில் நடித்து பிரபலமான இவர் தற்போது கோலிவுட்டில் இந்தியன் 2 உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ப்ரியா பத்திரிக்கையாளராக பணிபுரிந்த காலத்தில் திருமுருகன் காந்தி கைது குறித்து இட்டிருந்த பதிவை சுட்டிக்காட்டிய இணையவாசி ஒருவர் நீங்களும் திராவிட சொம்புதானா என்ற ரீதியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள ப்ரியா பவானி சங்கர் “This cracked me up. பெரிய CID.. ஏதோ தேடி கண்டுபிடிச்ச மாதிரி இதுல என்ன பெருமை? என் timeline la இன்னும் தானே இருக்கு? 4 வருஷம் journalista இருந்திருக்கேன். என் வேலையே அதுதான் இன்னும் நிறைய எழுதிருக்கேன். நன்கு தேடவும் ” என பதிலளித்துள்ளார். இந்த ட்வீட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.