1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 13 மார்ச் 2024 (08:21 IST)

ஆடு ஜீவிதம் படத்துக்காக 16 ஆண்டுகள் உழைத்திருக்கிறார் இயக்குனர் பிளஸ்ஸி- பிருத்விராஜ் ஆச்சர்யம்!

மலையாள இலக்கியத்தில் பெரும் கவனத்தை ஈர்த்த படைப்பு பென் யாமின் எழுதிய ‘ஆடு ஜீவிதம்’ நாவல். இந்த நாவல் தமிழுலும் மொழி பெயர்க்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் இந்நாவலை இயக்குனர் பிளஸ்சி திரைப்படமாக உருவாக்கியுள்ளார்.

ஆடு ஜீவிதம் என்ற படத்தில் பிரதிவிராஜ்  முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கேரளாவில் இருந்து அரபு நாட்டுக்கு வேலைக்கு செல்லும் ஒரு இளைஞன் அங்கு எதிர்கொள்ளும் பிரச்சனைகளால் அவர்  வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதே இந்த திரைப்படத்தின் கதை என்று தகவல்கள் வெளியாகின.

 இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படம் கொரோனா காலத்தில் அரபு நாடுகளில் படமாக்கப்பட்டது. ஆனால் ஷூட்டிங் முடிந்தும் சில ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இந்நிலையில் மார்ச் 28 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படம் தமிழிலும் அதே தேதியில் ரிலீஸ் ஆகிறது. சமீபத்தில் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி கவனம் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் பற்றி பேசியுள்ள பிருத்விராஜ் “இந்த படத்துக்காக இயக்குனர் ப்ளஸ்ஸி 16 ஆண்டுகள் உழைத்துள்ளார். அப்படி ஒருவரால் இருக்க முடியும் என்பதே எனக்கு பொறாமையாக இருக்காது. இப்படி ஒரு படத்தை என்னால் கண்டிப்பாக இயக்க முடியாது. எந்த படத்தில் நடித்து முடித்தாலும், இன்னும் கொஞ்சம் கூடுதலாக உழைப்பை கொடுத்திருக்கலாமோ என நினைப்பேன். ஆனால் இந்த படத்தில் மன நிறைவாக உணர்கிறேன்.  என்னுடைய உச்சபட்ச சிறப்பானதைக் கொடுத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.