வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 16 அக்டோபர் 2022 (16:41 IST)

சர்தார், பிரின்ஸ் படங்களின் சிறப்புக் காட்சி விவரங்கள்!

சர்தார் மற்றும் பிரின்ஸ் படங்களுக்கு முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் தற்போது சிறப்புக் காட்சி விவரங்கள் வெளியாகியுள்ளன.

கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் சர்தார் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. அதே போல சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படமும் அதே நாளில் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் இப்போது இந்த இரு படங்களுக்கும் முன்பதிவு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பிரின்ஸ் படத்துக்கு அதிகாலை 5 மணி சிறப்புக் காட்சிகளும், சர்தார் படத்துக்கு காலை 8 மணிக் காட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.