திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 11 டிசம்பர் 2021 (11:14 IST)

ரஜினி தங்க செயின்லாம் தராறு.. கொஞ்சம் கவனிங்க தலைவா! – பிரேம்ஜி ட்வீட்டால் சிரித்த எஸ்.ஜே.சூர்யா!

அண்ணாத்த படத்தின் வெற்றிக்காக இயக்குனர் சிவாவுக்கு ரஜினிகாந்த் தங்க செயின் வழங்கியதை சுட்டிக்காட்டி நடிகர் பிரேம்ஜி பதிவிட்டுள்ளது வைரலாகியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான படம் மாநாடு. டைம்லூப் கான்செப்டை மையமாக கொண்டு வெளியான இந்த படம் கடந்த 3 வாரங்களாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இந்நிலையில் அண்ணாத்த பட வெற்றிக்காக இயக்குனர் சிறுத்தை சிவாவை நேரில் சென்று ரஜினிகாந்த் தங்க செயின் வழங்கிய செய்தியை தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்துள்ள நடிகர் பிரேம்ஜி, நடிகர் சிம்புவை டேக் செய்து ”மை டியர் தலைவா, நான் என் அண்ணன் வெங்கட்பிரபு வீட்டு முகவரியை அனுப்பவா?” என்று கேட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா சிரிப்பு எமோஜிக்களோடு ரீட்வீட் செய்துள்ளார். இந்த பதிவுகள் ட்விட்டரில் வைரலாகியுள்ளது.