1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 29 மார்ச் 2019 (15:06 IST)

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிராத்தனை செய்யுங்கள் - சூப்பர் ஸ்டார் கோரிக்கை

ஹிந்தி சினிமாவில் எந்த பின்னணியும் இல்லாமல் தன் சுயமுயற்சியால் நடிகராக அறிமுகம் ஆகி, இப்போதுவரை சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக்கொண்டருப்பவர் ஷாருகான். 
இவருக்கு உலகம் முழுக்க எண்ணற்ற ரசிகர்கள் உண்டு. குறிப்பாக பெண் ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லஹ்மி என்ற பெண்ணின் வாழ்க்கை வரலாறு சபாக் என்ற திரைப்படமாக தயாயாகிவருகிறது. 
 
இதில் முன்னணி நடுகையான தீபிகா படுகோனே லஹ்மி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதுடன் இப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.
 
இந்நிலையில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களை சமீபத்தில் சந்தித்து பேசிய ஷாருக்கான்  அந்த நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது :
 
அனைவரும் தங்கள் கைகளை பிராத்தனைக்காக வையுங்கள். இந்த சகோதரிகளின் வாழ்வில் கருணை பொழியட்டும்.  அவர்கள் குணமாக உங்களின் பிராத்தனை தேவை. 
இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
தற்போது இந்த பெண்கள் மீர் பவுண்டேசன் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.