ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 20 மார்ச் 2020 (15:33 IST)

இந்து மதத்தைப் பார்த்து சிரித்தவர்கள்… இப்போது ? – கொரோனா குறித்து முன்னணி நடிகைக் கருத்து !

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான பிரணிதா இந்து மதத்தைப் புகழ்ந்து தன் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றைத் தவிர்க்க மக்கள் ஒருவரை ஒருவர் தொட்டுக்கொள்வதை தவிர்க்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் மரியாதை நிமித்தமாக இந்திய முறைப்படி கைகூப்பி வணக்கம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் இந்த முறையைப் பின்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைப்பற்றி தமிழ் நடிகையான பிரணிதா ‘இந்து மக்கள் வணக்கம் தெரிவித்ததைப் பார்த்து சிரித்தார்கள். வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னால் கைகளையும், கால்களையும் கழுவுவதைப் பார்த்து சிரித்தார்கள். அதேப்போல விலங்குகளையும், மரங்களையும், காடுகளையும் வணங்குவதை பார்த்து சிரித்தார்கள். இந்துக்களின் சைவ உணவுப்பழக்கம், யோகா ஆகியவற்றைப் பார்த்தும் சிரித்தார்கள். இறந்தவர்களை எரிப்பதை பார்த்து சிரித்தார்கள். இறுதி சடங்கில் கலந்து கொண்ட பிறகு குளிப்பதை பார்த்து சிரித்தார்கள். ஆனால் இப்போது யாரும் சிரிக்கவில்லை. அதற்குப் பதிலாக சிந்திக்கிறார்கள். இந்த பழக்கம் தான் கொரோனா பரவாமல் தடுக்கிறது. இது மதம் இல்லை. வாழ்க்கையின் வழி.’ என சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.