திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 12 மே 2018 (18:46 IST)

கர்நாடக தேர்தலில் வாக்களித்த பிரபல தமிழ் நடிகை!

கர்நாடகத்தில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பிரபல தமிழ் நடிகை பிரணீதா வாக்களித்தார்.
 
கர்நாடகத்தில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 224 தொகுகளில், 222 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.
 
இத்தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6.30 மணி வரை நடைபெற்றது. மொத்தம் 55 ஆயிரத்து 600 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 3.5 அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 
 
இந்த தேர்தலில் சகுனி மற்றும் மாஸ் படங்களில் நடித்த பிரணீதா வாக்களித்துள்ளார். அந்த புகைப்படத்தை அவர் சமூக வளைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.