வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 பிப்ரவரி 2023 (14:31 IST)

காஷ்மீர் ஃபைல்ஸுக்கு ஆஸ்கர் இல்ல.. பாஸ்கர் கூட கிடைக்காது! – பிரகாஷ்ராஜ் கலாய்!

பதான் திரைப்படத்தை வெளியிட இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததையும் மீறி படம் வெற்றி பெற்றுள்ளது குறித்து பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார்.

ஷாரூக்கான், தீபிகா படுகோன் நடித்து சமீபத்தில் வெளியான படம் பதான். ஆரம்பத்தில் இதன் பாடல்கள் வெளியானபோது தீபிகா படுகோன் காவி நிற கவர்ச்சி ஆடை அணிந்திருந்தது சர்ச்சைக்குள்ளானது. அதை தொடர்ந்து படத்தை தடை செய்ய வேண்டும் என பல பகுதிகளிலும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.

சர்ச்சைகளுக்கு நடுவே வெளியான பதான் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி 700 கோடி அளவு உலக அளவில் பதான் திரைப்படம் வசூலித்துள்ளது.

இந்நிலையில் கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ் “இவர்கள் பதான் படத்தை தடை செய்ய நினைத்தார்கள். ஆனால் அது 700 கோடியை தாண்டி வசூலித்துக் கொண்டிருக்கிறது. பதானை தடை செய்ய சொன்ன இவர்களால் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை 30 கோடிக்கு கூட ஓட்ட முடியவில்லை. “காஷ்மீர் ஃபைல்ஸ்” மற்றொரு முட்டாள்தனமான படம். அதன் இயக்குனர் தனக்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை என புலம்பிக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஆஸ்கர் அல்ல.. ஒரு பாஸ்கர் கூட கிடைக்காது” என பேசியுள்ளார்.

Edit by Prasanth.K