1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 24 மார்ச் 2020 (16:14 IST)

நடிகர் பிரகாஷ்ராஜின் செயலுக்குக் குவியும் பாராட்டுகள் – மே மாதம் வரை எல்லோருக்கும் சம்பளம் !

நடிகர் பிரகாஷ்ராஜ் தனது வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் எல்லோருக்கும் மே மாதம் வரைக்குமான சம்பளத்தைக் கொடுத்துள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் கொரோனா வைரஸ் பீதியை அடுத்து தனது வீடு, அலுவலகம் மற்றும் சினிமா தயாரிப்பு நிறுவனம் எனப் பணிபுரியும் பணியாளர்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கான சம்பளத்தை இப்போதே அளித்துள்ளார்.

இது சம்மந்தமாக தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ எனது வீடு, சினிமா தயாரிப்பு நிறுவனம், அறக்கட்டளை ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் என அனைவருக்கும் மே மாதம் வரைக்குமான சம்பளத்தை இப்போதே வழங்கி விட்டேன். கொரோனா பீதி காரணமாக நின்று போயிருக்கும் எனது மூன்று படங்களிலும், சம்பந்தப்பட்ட தினக்கூலி பணியாளர்களுக்குக் குறைந்தது அரை சம்பளத்தைத் தர வேண்டிய வழிமுறைகளை மேற்கொண்டுள்ளேன். ஆயினும் இன்னும் முடியவில்லை. என்னால் முடிந்த வரை இன்னும் பண்ணுவேன் . நம்முடையே வாழ்க்கைக்கு நாம் திரும்பத் தர வேண்டிய நேரமிது. ஒருவருடன் ஒருவர் ஆதரவாக நிற்க வேண்டிய வேளை இது’ எனக் கூறியுள்ளார்.

அவரது இந்த செயலுக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.