பிரகாஷ் ராஜுக்கு தெலுங்கு சினிமாவினர் மத்தியில் கிளம்பிய கடுமையான எதிர்ப்பு!
நடிகர் பிரகாஷ் ராஜ் தெலுங்கு சினிமா நடிகர் சங்க தேர்தலில் நிற்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
நடிகர் பிரகாஷ் சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதற்கு முன்னதாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து இப்போது அவர் தெலுங்கு சினிமா நடிகர்களின் சங்கமான மா எனப்படும் மூவி ஆர்டிஸ்ட் அசோஷியேஷன் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.
ஆனால் பிறப்பில் கன்னடரான பிரகாஷ் ராஜ் தெலுங்கு சினிமா நடிகர் தேர்தலில் நிற்பதற்கு அங்குள்ள நடிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளதாம். ஆனால் பிரகாஷ் ராஜை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவராகவே கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.