திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 7 ஜூன் 2024 (08:30 IST)

ப்ரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ படத்தில் மிஷ்கின்… பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கு போல!

தமிழ் திரை உலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் புரொடக்சன் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கிய நிலையில் படம் நவம்பர் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

இப்போது முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதுவரை பிரதீப் சம்மந்தப்பட்ட காட்சிகளை மட்டும் படக்குழு படமாக்கி வந்தனர். இன்னும் படத்தின் ஹீரோயின் யார் என்பது கூட இறுதி செய்யப்படவில்லை என சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. படத்தில் மிஷ்கின் மற்றும் கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் வி ஜே சித்து ஒரு வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.