திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 19 மே 2018 (19:22 IST)

முதல்முறையாக போலீசாக நடிக்கும் பிரபுதேவா

தமிழில் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் பிரபுதேவா முதல் முறையாக போலீசாக நடிக்க உள்ளார்.
 
பல வருட இடைவெளிக்குப் பிறகு விஜய் இயக்கிய தேவி படத்தின் மூலம் மீண்டும் தமிழில் ஹிரோவாக ரீ-எண்ட்ரி  கொடுத்தார் பிரபுதேவா. அதன் பின்னர் அவரது  குலேபகாவாலி, மெர்குரி உள்ளிட்ட படங்கள் ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 
 
இதைத்தொடர்து லஷ்மி, யங் மங் சங், சார்லி சாப்ளின் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். மேலும், சல்மான் கானை வைத்து ஹிந்தியில் படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
 
இந்நிலையில், பிரபுதேவா ஏ.சி.முகில் இயக்கும் படத்தில் போலீசாக நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை ஜெபக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நேமிசந்த ஜெபக் தயாரிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.