செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 17 மார்ச் 2021 (22:29 IST)

காசு வாங்கிட்டு ஓட்டு போட்ட…தீர்ந்திடுமா வறுமை – பிரபுதேவா பாடல் வைரல்

தமிழ் சினிமாவில் சூரியன் படத்தில் நடன கலைஞராக இருந்து காதலன் படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் பிரபுதேவா.

இவர் தற்போது பாலிவுட், கோலிவுட்டில் பிஸியாக படங்களை இயக்கியும் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில், இவர் தற்போது தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வரவுள்ளது. இந்நிலையில், பிரபுதேவா இத்தேர்தலுக்காக விழிப்புணர்வு பாடலைப் பாடியுள்ளார். இதில் காசு வாங்கிட்டு ஓட்டுப்போட்டா தீர்ந்திடுமா வறுமை  என்பது அந்தப் பாட்டில் வரிகளில் இடம்பெற்றுள்ள்து, இது வைரலாகி வருகிறது.