1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 2 ஜனவரி 2024 (07:08 IST)

சலார் 10 நாள் கலெக்‌ஷன் இவ்வளவுதானா? அப்ப 1000 கோடி கஷ்டம்தான்!

பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் நடித்துள்ள சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான்.  இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரித்துள்ளார். கே ஜி எஃப் இசையமைபபாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.

கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 22 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆனது. பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களுக்குப் பின்னர் பிரபாஸ் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்களை திருப்திப் படுத்தாததால் இந்த படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, இந்தியா முழுவதும் அதிக அளவிலான திரைகளில் ரிலீஸ் ஆனது. ஆனால் ரிலீஸுக்கு பிறகு இந்த படம் ரசிகர்களை பெரியளவில் ஏமாற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது படம் வெளியாகி 10 நாட்கள் கடந்துள்ள நிலையில் 601 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நெகட்டிவ் விமர்சனங்கள் காரணமாக சலார் படத்தின் வசூல் பெரும் சரிவை சந்தித்துள்ளது. அதனால் இந்த படம் 1000 கோடி வசூல் செய்யாது என சொல்லப்படுகிறது.