புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 24 ஜூலை 2021 (20:39 IST)

சூப்பர் ஸ்டார் காட்சியை துவக்கி வைத்த பிரபாஸ்

இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் நடிக்கும் காட்சியை நடிகர் பிரபாஸ் கிளாப் அடித்துத் தொடங்கி வைத்தார்.

பாகுபலி படத்தில் நடித்த பிறகு நடிகர் பிரபாஸின் மார்க்கெட் அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர் என்ற அளவுக்கு எகிறி விட்டது.

தற்போது அவர், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மகா நடி என்ற படத்தை இயக்கிய இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் அமிதாப், மற்றும் தீபிகா படுகோன் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் இன்று பெயரிடப்படாத இப்படத்தின் முதல் காட்சியில் அமிதாப் நடித்தார். இதை கிளாப் அடித்து பிரபாஸ் தொடங்கிவைத்தார். இப்படம் வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் 50 வது படம் என்பதால் பிரமாண்டமாகத் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.