இந்த படமும் போச்சா.. ‘சலார்’ டீசரை பார்த்து ரசிகர்கள் அதிருப்தி..!
பிரபாஸ் நடித்த சலார் படத்தின் டீசர் இன்று அதிகாலை வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் டீசரை பார்த்து ரசிகர்கள் அதிருப்தி அடைந்து தங்களுடைய கருத்துக்களை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்த சாஹோ, ராதே ஷ்யாம் மற்றும் ஆதிபுருஷ் ஆகிய மூன்று படங்களும் படுதோல்வி அடைந்தன. இதனை அடுத்து அவர் சலாம் என்ற படத்தை தான் மிகப்பெரிய அளவில் நம்பி இருந்த நிலையில் இன்று காலை இந்த படத்தின் டிரைலர் வெளியானது.
ஆனால் இந்த படத்தின் டிரைலரில் எந்தவிதமான புதுமையான காட்சிகளும் இல்லை என்றும் ஏற்கனவே பல படத்தில் பார்த்த காட்சிகள் தான் உள்ளது என்றும் குறிப்பாக கேஜிஎப் படத்தின் பட காட்சிகள் இருக்கிறது என்றும் ரசிகர்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
இந்த படமாவது பிரபாஸுக்கு வெற்றி படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்