வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 18 மே 2017 (15:42 IST)

மீண்டும் இணையும் பிரபாஸ் அனுஷ்கா?

பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தில் மீண்டும் அனுஷ்கா ஜோடியாக இணையலாம் என தெலுங்கு சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.


 

 
பாகுபலி நாயகன் பிராபஸ் நடிக்கும் சாஹோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகைகள் பலரிடம் கேட்டு வந்தனர். ஆனால் பாலிவுட் முன்னணி நடிகைகள் அனைவரும் மறுப்பு தெரிவித்துவிட்டனர். இதையடுத்து யாரை பிராபாஸுக்கு ஜோடியாக நடிக்க வைக்கலாம் என படக்குழு ஆலோசனையில் உள்ளது.
 
இதைத்தொடர்ந்து பூஜா ஹெச்தே நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது அனுஷ்கா மீண்டும் பிரபாஸுடன் ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இந்த பிரபாஸ் - அனுஷ்கா ஜோடி ரசிகர்கள் மத்தியில் சிறந்த ஜோடியக கருதப்படுக்கிறது. பாகுபலி படம் மூலம் இந்த ஜோடி பெரும் புகழ் பெற்றுள்ளது. இந்நிலையில் அனுஷ்காவும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம். இதனால் மீண்டும் இந்த ஜோடி இணைய வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.