1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 6 பிப்ரவரி 2020 (14:34 IST)

எஸ்.எஸ்.ராஜமவுலி படத்தில் மீண்டும் பிரபாஸ்: ’பாகுபலி 3’ உருவாகிறதா?

எஸ்.எஸ்.ராஜமவுலி படத்தில் மீண்டும் பிரபாஸ்
இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா நடித்த பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் உலக அளவில் சூப்பர் ஹிட்டானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிரபாஸ் மற்றும் ராஜமவுலி ஆகிய இருவரும் வெவ்வேறு படங்களில் தற்போது பணிபுரிந்து வருகின்றனர் 
 
ராஜமவுலி இயக்கி வரும் ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற படத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. பாகுபலி, பாகுபலி 2’ படங்களுக்கு பின்னர் ’சாஹோ’ என்ற திரைப்படத்தில் நடித்த பிரபாஸ் தற்போதுதான் ’ஜான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகவுள்ளது.
 
இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு மீண்டும் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படம் பாகுபலி மூன்றாம் பாகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த படம் பாகுபலி 3’ படமா? அல்லது புதிய கதையம்சம் கொண்டதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் அடுத்த ஆண்டு இருவரும் இணைவது மட்டும் உறுதி என்று கூறப்படுகிறது