கபாலி பட வெளியீடு மறுபடியும் தள்ளிப் போயுள்ளது. ஜுலை 1 -ஆம் தேதி கபாலி வெளியாகும் என்று முதலில் கூறப்பட்டது.
பிறகு ஜுலை 15 -ஆம் தேதி வெளியாகும் என்று வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் உறுதிபட தெரிவித்தனர். ஆனால், அன்றும் படம் வெளிவர வாய்ப்பில்லை என தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஒரு வாரம் தள்ளி ஜுலை 22 படம் வெளியாகலாம் என கூறப்படுகிறது. படம் தள்ளிப் போவதற்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.