ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 20 ஜூன் 2024 (16:53 IST)

போர்த் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் அடுத்த படத்தில் தனுஷ்!

நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கிய திரைப்படம் போர்த் தொழில். கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைக் குவித்து நல்ல வசூலை ஈட்டியுள்ளது. 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து கடந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

அந்த படம் ரிலீஸாகி ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இன்னும் தன்னுடைய அடுத்த படத்தை விக்னேஷ் ராஜா அறிவிக்கவில்லை. இந்நிலையில் இப்போது அவர் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் விக்னேஷ் ராஜா மற்றும் அசோக் செல்வன் ஆகிய இருவரும் மீண்டும் ஒரு படத்துக்காக இணைந்து பணியாற்ற உள்ளதாக ஒரு தகவல் வெளியானது. இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படம் கமலஹசன் நடிப்பில் 1988 ஆம் ஆண்டு வெளியான சத்யா படத்தின் ரீமேக் என்றும் சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.