1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (20:27 IST)

பிரபாஸுக்கு ஜோடியான பிரபல நடிகை

பிரபாஸுக்கு ஜோடியாக பிரபல நடிகை  நடிக்கவுள்ளார். 

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பிரபாஸ். இவர்,  பிரஷாந்த் நீலின் சலார் படத்தில் நடித்து வருவதுடன்,  நாக் அஸ்வி இயக்கத்தில், கல்கி 2898 –ஏடி என்ற பிரமாண்ட படத்திலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில், KALKI 2898-AD படத்தின் தீபிகா படுகோன், பிரபாஸின் போஸ்டர்கள் வெளியானது, இதையத்து, இப்படத்தின் டீசரும் வெளியாகி வரவேற்பை பெற்றது. 
 
nidhi agarwal

வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில், அமிதாப்பச்சன், கமல்ஹாசன் திஷா பதானி உள்ளிட்டோர்  நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்  இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக  ‘ராஜா டீலக்ஸ்’ படத்தில் நடித்த நிதி அகர்வால் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.