1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வெள்ளி, 22 நவம்பர் 2019 (16:44 IST)

"நெஞ்சிருக்கும் வரை" பட நடிகையா இது...! பார்த்தா நெஞ்ச இழுத்து பிடிச்சுப்பீங்க..!

தமிழில், நெஞ்சிருக்கும் வரை, பயணம், என் வழி தனி வழி, 6 மெழுகுவர்த்திகள், அச்சாரம் உட்பட சில படங்களில் நடித்திருந்தாலும் நடிகை பூனம் கவூரை பார்த்தவுடன் அடையாளம் காணமுடிவது நெஞ்சிருக்கும் வரை படத்தில் தான்,  அந்த அளவிற்கு அப்படத்தில் உண்மையான காதலியாக தன் காதலை வெளிப்படுத்தியிருப்பார்.
 
தெலுங்கு நடிகையான பூனம் மலையாளம் , தமிழ் , தெலுங்கு போன்ற மொழிப்படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு வாய்ப்பு கிட்டவில்லை ஆதலால்  தெலுங்கு சீரியல் ஒன்றில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். 
 
கல்லூரியில் படிக்கும் போதே படவாய்ப்பு  கிடைக்க தனது 20 வயதில் மாயாஜாலம் என்ற தெலுங்கு படத்தில் நடித்து சினிமா உலகில் அறிமுகமானார்.பிறகு 2007ஆம் ஆண்டு தமிழில் நெஞ்சிருக்கும் வரை என்ற படத்தில் அறிமுகம் ஆனார். அதன்பின்னர் உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி, என் வழி தனி வழி, அச்சாரம் என் தமிழ் படங்களில் நடித்தார். அழகு புதுமையான முகபாவனை கொண்டிருந்தாலும் தமிழில் இவரால் பெரிதாக சாதிக்க முடியவில்லை. 
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  தான் இதுவரை சினிமாவில் காட்டாத கவர்ச்சியை காட்டி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். மேலும் அடிக்கடி கோவில் குளம் என சுற்றி வருகிறார். பூனம் கவுர் கவர்ச்சியை கண்ட ரசிர்கள் நீங்க இப்டி கூட இருப்பீங்களா..? என வியந்து வருகின்றனர்.