செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 17 ஜூலை 2020 (11:16 IST)

சமந்தாவை பின்னுக்கு தள்ளிய பூஜா ஹெக்டே - நடிகைகளுக்குள்ளும் இப்படி ஒரு போட்டியா?

அஜித் - விஜய் போன்ற பெரிய நடிகர்களின் ரசிகர்கள் சண்டையிட்டு கொள்வதுபோல் நடிகைகளின் ரசிகர்களும் மோதிக்கொள்கின்றனர். காரணம் அந்தந்த நடிகைகளே வைத்துக்கொண்ட வினை தான். ஆம் சில தினங்களுக்கு முன்னர் நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்ஸில் "சமந்தா அப்படி ஒன்றும் அழகில்லையே" என கூறியது பெரும் சர்ச்சைக்குள்ளாக்கியது.

இதையடுத்து அந்த ஸ்டேட்டஸ் நான் போட்டதில்லை என்னுடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக கூறிய பூஜா ஹெக்டே டெக்னிக்கள் டீம் உதவியுடன் அதை மீட்டதாக தெரிவித்து போடப்பட்ட அந்த பதிவுகளையும் கணக்கில் இருந்து நீக்கிவிட்டார். இதனை சமந்தா  ஓ பேபி படத்தின் இயக்குனர் நந்தினி ரெட்டி மற்றும் சின்மயியுடன் சேர்ந்துகொண்டு பூஜா ஹெக்டேவை கலாய்த்து தள்ளினார்.

இப்படியாக சமந்தா -  பூஜா ஹெக்டேவின் விவகாரம் குழாய் அடி சண்டையாக பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்ப்போது நடிகை பூஜா ஹெக்டேவை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை  11 மில்லியன் தொட்டுள்ளதாக ஹேப்பியாக பதிவிட்டுள்ளார். ஆனால், சமந்தாவிற்கு தற்போது வரை 10.8 மில்லியன் ஃபாலோவர்ஸ் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.