1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 14 மே 2022 (16:06 IST)

சல்மான் கானுக்கு ஜோடியான விஜய் பட ஹீரோயின்! அவரே வெளியிட்ட புகைப்படம்!

பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டே தற்போது தனது அடுத்த படத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழில் முகமூடி படத்திலேயே அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. அந்த வாய்ப்பு இப்போது பீஸ்ட் படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இந்த படத்தில் அவருக்கு பெரிய வேடம் இல்லை என்றாலும், அவரது கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது.  இந்நிலையில் இப்போது அவர் தனது அடுத்த படத்தைப் பற்றிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

ராதே ஷ்யாம் மூலமாக பாலிவுட் ரசிகர்களிடம் அறிமுகம் ஆன பூஜா, அடுத்து  சல்மான் கான் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளதை உறுதி செய்து, அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி விட்டதாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.