செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (16:21 IST)

பொன்னியின் செல்வன் ட்ரெய்லரை வெளியிடும் முதல்வர்!? – எப்போது தெரியுமா?

Ponniyin Selvan
விரைவில் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் சரித்திர படத்தின் ட்ரெய்லரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யாராய், விக்ரம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள சரித்திர படம் “பொன்னியின் செல்வன்”. அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள நிலையில் முதல் பாடலான “பொன்னி நதி” பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் வைரலாகியுள்ளது. செப்டம்பர் இறுதியில் படம் வெளியாக உள்ள நிலையில் படத்திற்கான ப்ரொமோசன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் பெருங்கனவான பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரெய்லரை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 6ம் தேதி சென்னையிலும், ஐதராபாத்தில் செப்டம்பர் 8ம் தேதியும் பாடல் வெளியீட்டை கோலாகலமாக நடத்த திட்டமிடபட்டுள்ளது.