திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 3 அக்டோபர் 2022 (10:09 IST)

பொன்னியின் செல்வன் 3 நாட்களில் ரூ.220 கோடி வசூல்: விக்ரம் வசூலை முந்துமா?

ponniyin selvan
பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகி தற்போது அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய மூன்று நாள்களில் 220 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இந்த படத்திற்கு கிடைத்த பாஸிட்டிவ் கமெண்ட்ஸ் காரணமாக இந்த படத்தின் வசூல் உலகம் முழுவதும் சிறப்பாக இருப்பதாக கூறப்படுகிறது
 
தமிழகத்தில் மட்டும் சுமார் 78  கோடி வசூல் செய்துள்ள ஆகும் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 122 கோடி வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் வெளிநாட்டு வசூல் 92 கோடி என்று கூறப்படுகிறது. இதனால் 3 நாட்களின் மொத்த வசூல் 220 கோடி ரூபாய் என தெரிகிறது.
 
இந்த நிலையில் தமிழ் திரை உலகில் அதிகம் வசூல் செய்த விக்ரம் திரைப்படம் 450 கோடி வசூல் செய்துள்ள நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னும் ஒரு சில நாட்களில் அந்த வசூலை நெருங்கி விடும் என்று கூறப்படுகிறது
 
Edited by Mahendran