வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 29 டிசம்பர் 2022 (08:56 IST)

பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு… ஜெயிலருக்கு சிக்கல்!

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் அபார வெற்றிக்குப் பிறகு இரண்டாம் பாகம் ஏப்ரல் 28, 2003 அன்று வெளியாக உள்ளது.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தை ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏப்ரல் 28 ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 வெளியாவதால், ரஜினியின் ஜெயிலர் ரிலீஸ் சில வாரங்கள் முன்னோ, பின்னோ தள்ளிவைக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.