திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 17 செப்டம்பர் 2022 (09:17 IST)

பிரபல தொலைக்காட்சியில் பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சி!

சமீபத்தில் நடந்து முடிந்த பொன்னியின் செல்வன் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி ரசிகர்களை பெரியளவில் கவர்ந்தது.

சில தினங்களுக்கு  முன்னர் பொன்னியின் செல்வன் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது. அந்த விழாவில் மூத்த நடிகர்களான ரஜினி மற்றும் கமல் கலந்துகொண்டு பேசியது ரசிகர்களைப் பெரியளவில் கவர்ந்தது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது பிரபல தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னோட்டம் வெளியான நிலையில் விரைவில் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐந்து மொழிகளில் பேன் இந்தியா ரிலீஸாக செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.