1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 30 ஏப்ரல் 2023 (13:28 IST)

இரண்டு நாட்களில் ரூ.100 கோடி வசூல்! – டாப் ஹிட் பொன்னியின் செல்வன் 2!

Ponniyin selvan review
சோழர்களின் வரலாற்றை குறித்த படமான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இரண்டே நாட்களில் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட பலர் நடித்து வெளியாகியுள்ள படம் ‘பொன்னியின் செல்வன்’. கல்கி எழுதிய வரலாற்று புதினமான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி இரண்டு பாகமாக உருவாக்கப்பட்ட இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

அதை தொடர்ந்து தற்போது பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த சூழலில் பல பகுதிகளில் ஹவுஸ் புல் காட்சிகளுடன் ஓடி வருகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டே நாட்களில் மொத்தமாக ரூ.100 கோடியை பொன்னியின் செல்வன் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இரண்டே நாட்களில் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படும் நிலையில் வரும் வாரங்களில் வசூல் நிலவரம் முதல் பாகத்தை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K