1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (17:23 IST)

‘பொன்னியின் செல்வன்’ பொன்னி நதி பாடலின் மேக்கிங் வீடியோ ரிலீஸ்!

Ponni Nadhi
இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே
 
இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது என்பதும் அதனை அடுத்து பொன்னி நதி என்ற பாடல் வெளியாகி இரண்டுமே இணையதளங்களில் வைரலாக என்பதையும் பார்த்தோம் 
 
இந்த நிலையில் சற்று முன்னர் பொன்னி நதி  பாடல் உருவான வீடியோ வை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த வீடியோவில் கார்த்தி இந்த பாடலில் நடித்த அனுபவங்களை கூறியுள்ளார். அதேபோல் இந்த பாடலுக்கு நடனம் அமைத்து அனுபவங்களை நடன இயக்குனர் பிருந்தா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது