வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Modified: புதன், 18 மார்ச் 2020 (18:01 IST)

வான் தூறல்கள்... " பொன்மகள் வந்தால் " செகண்ட் சிங்கிள் வீடியோ!

அறிமுக இயக்குனர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் படம்  "பொன்மகள் வந்தால் ".  சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு  ஊட்டி மற்றும் கொடைக்கானலில் நடைபெற்றது. அண்மையில் வெளிவந்த இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் வழக்கறிஞர் தோற்றத்தில் ஜோதிகா வித்யாசமாக இருந்தார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா (மார்ச் 17) நேற்று சென்னையில் நடைபெறவிருந்தது. ஆனால்,  கொரோனா வைரஸ் அச்சம் தொடர்பாக இவ்விழாவை ரத்து செய்த படக்குழு சமூக வலைதளத்தில் பாடல்கள் வெளியிடப்படும் என அறிவித்திருந்தனர். அதன் படி சற்றுமுன் இப்படத்தின் 'வான் தூறல்கள்" என்ற இரண்டாவது சிங்கிள் டிராக் வீடியோவை யூடியூபில் வெளியிட்டுள்ளனர். இதோ அந்த பாடல்...