15 வருடங்களைக் கடந்த பொல்லாதவன்… ரி யூனியன் ஆன டீம் கொண்டாட்டம்!
இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷின் வெற்றிக் கூட்டணி முதன் முதலாக கைகோர்த்த படம் பொல்லாதவன். 2007 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த படத்தில் தனுஷ் பயன்படுத்திய பல்சர் பைக் அதன் பிறகு தமிழ்நாட்டு இளைஞர்களால் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில் பொல்லாதவன் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளதை அடுத்து தனுஷ், வெற்றி மாறன் மற்றும் திவ்யா ஸ்பந்தனா உள்ளிட்ட படக்குழுவினர் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.