வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 24 மார்ச் 2019 (10:38 IST)

நள்ளிரவில் நடந்த கூத்து: கையும் களவுமாக சிக்கிய ஸ்ரீரெட்டி

நள்ளிரவில் தன்னை வீடு புகுந்து அடித்ததாக நாடகமாடிய ஸ்ரீரெட்டி போலீஸில் வசமாக சிக்கியுள்ளார்.
 
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திய தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் மீதும் வரிசையாக பாலியல் புகார் கூறினார் ஸ்ரீ ரெட்டி. நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சந்தீப், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் சுந்தர்.சி  ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுகளை வைத்து பரபரப்பைக் கிளப்பினார்.
 
இதையடுத்து அவர் தற்போது சென்னையில் வசித்துக்கொண்டு சில தமிழ்ப்படங்களில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் நள்ளிரவில் தயாரிப்பாளர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து தன்னை தாக்கியதாக ஸ்ரீ ரெட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
 
பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில் ஸ்ரீரெட்டியின் சம்மதத்துடனேயே தயாரிப்பாளர் வீட்டிற்கு வந்தது தெரியவந்தது. மேலும் அவர் தங்கியிருக்கும் வீட்டிற்கே அவர் தான் மாதாமாதம் வாடகை கட்டுகிறார் எனவும் தெரிய வந்தது. அப்படியிருக்க ஏன் ஸ்ரீடெட்டி இப்படி செய்தார் என தெரியவில்லை. இதையடுத்து போலீஸார் போலியாக புகார் கொடுத்த ஸ்ரீரெட்டியை எச்சரித்து அனுப்பினர்.
 
தயாரிப்பாளரை மிரட்டுவதற்காக ஸ்ரீரெட்டி இப்படி செய்தாரா, இதற்கு முன்னர் அவர் அளித்த அனைத்து புகார்களும் இதேபோல் கட்டுக்கதை தானா என்ற சந்தேகமும் மனதில் எழுகிறது...