புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 30 அக்டோபர் 2023 (13:33 IST)

லியோ வெற்றி விழா … படக்குழுவுக்கு காவல்துறை விதித்த கட்டுப்பாடுகள்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான படம் லியோ. இந்த படத்தில் திரிஷா, மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். படம் வெளியான ஒரு வாரத்திலேயே 461+ கோடிகளை வசூலித்து படம் மிகப் பெரும் ஹிட் அடித்துள்ளது.

விடுமுறை தினங்கள் முடிந்துள்ள நிலையில் இப்போது கலெக்‌ஷன் குறைய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் படத்தின் வசூலை பூஸ்ட் செய்ய வெற்றிவிழாவை நவம்பர் 1 ஆம் தேதி கொண்டாட உள்ளது படக்குழு. இதற்காக அனுமதி கேட்டு காவல்துறையில் விண்ணப்பம் அளித்திருந்தனர்.
இந்நிலையில் சில கட்டுப்பாடுகளோடு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அந்த கட்டுப்பாடுகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவை:
  • 200 முதல் 300 கார்களுக்கு மட்டுமே அனுமதி
  • பேருந்துகளுக்கு அனுமதி இல்லை
  • அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மட்டுமே டிக்கெட்கள் கொடுக்கப்பட வேண்டும்
  • அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் ரசிகர்களை அழைக்கக் கூடாது.
ஆகிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது