1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 1 மார்ச் 2017 (14:53 IST)

துப்பறியும் போலீசான சோனியா அகர்வால்

சோனியா அகர்வால் குறித்த செய்திகள் அடிக்கடி தட்டுப்படுகின்றன. ஐந்து மொழிகளில் தயாராகும் அகல்யா படத்தில் சோனியா  அகர்வால் நடிக்கிறார்.

 
இந்த செய்தி வெளியாகி ஒருவாரமே இருக்கும்... அதற்குள் இன்னொரு தகவல். எவனவன் என்ற படத்தில் சோனியா அகர்வால் நாயகியாக நடிக்கிறார். அதுவும் துப்பறியும் போலீசாக.
 
மெய்ப்பொருள், பனித்துளி படங்களை இயக்கிய நட்டி குமார் இயக்கும் இந்தப் படம் த்ரில்லர் வகைமையில் ஒருவாகிறது.  சோனியா அகர்வால், வின்சென்ட் அசோகன், அறிமுக நடிகர் அகில் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். சோனியா அகர்வால், வின்சென்ட் அசோகன் இருக்கும் துப்பறியும் போலீஸ் வேடம்.
 
முழுக்க சென்னையில் இந்தப் படம் தயாராகி வருகிறது.