பின்னணி இசை பணிகளை முடித்த கார்த்திக் ராஜா … ரிலீஸ்க்கு தயாராகும் பிசாசு 2!
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 திரைப்படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் முடிந்துள்ளன.
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. அந்த படத்தில் பிசாசு எதிர்மறை கதாபாத்திரத்தில் உருவாக்காமல் தேவதையை போல உருவாக்கியிருந்தார் மிஷ்கின். அதனால் அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் மிஷ்கின். இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக கார்த்திக் ராஜா மிஷ்கின் படத்துக்கு இசையமைக்கிறார். விஜய் சேதுபதி ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது.
இந்நிலையில் கடந்த வாரம் முழுவதும் படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு பணிகளை இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவும், இயக்குனர் மிஷ்கினும் செய்து முடித்துள்ளனர். இதையடுத்து படத்துக்கான ஒலிப்பதிவு சத்தங்களுக்காக மிஷ்கின் காட்டுபகுதிகளுக்கு சென்று இப்போது முகாமிட்டு வருகிறாராம். விரைவில் அந்த பணிகளும் முடிந்து ரிலிஸுக்கு படம் தயாராக உள்ளதாக சொல்லப்படுகிறது.