1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Updated : திங்கள், 16 டிசம்பர் 2019 (17:29 IST)

பிரபல சினிமா பாடகரின் மகளைக் காணவில்லை ... போலீஸில் புகார் !

பிரபல நாட்டுப்புற பாடகர் மற்றும் சினிமா பின்னணி பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகள் திடீரென காணமால் போனதாக போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
பிரபல நாட்டுப்புற கலைஞர் மற்றும் சினிமா பின்னனி பாடகருமான புஷ்பவனம் குப்புசாமி - அனிதா தம்பதியினர் சென்னையில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியரின் மகள் பல்லவி மருத்துவத்துப் படிப்பு படித்து வந்தார்.
 
இந்நிலையில், அபிராமி புரத்தில் உள்ள காவல் நிலையத்தில், புஷ்பவனம் குப்புசாமியின் உறவினர் கவுசிக் ஒரு புகார் அளித்துள்ளார்.
 
அந்தப் புகாரில், புஷ்பவனம் குப்புசாமியின் மகளைக் காணவில்லை, நேற்று இரவில் வீட்டில் சிறிய வாக்குவாதம் நடைபெற்றதாகவும், அந்த கோபத்தில், பல்லவி வீட்டில் இருந்து காரை எடுத்துக் கொண்டு சென்றவர் வீட்டுக்கு மீண்டு திரும்பவில்லை. அதனால் விரைவில் கண்டுபிடித்துத் தர வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.