Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஜய்சேதுபதியை திடீரென கழட்டிவிட்ட பி.சி.ஸ்ரீராம்


sivalingam| Last Modified ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2017 (22:21 IST)
தேசிய விருது பெற்ற பி.சி.ஸ்ரீராம் ஒரு படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினால் என்றால் அந்த படம் வெற்றியடைகிறதோ இல்லையோ கண்டிப்பாக தரமான படமாக இருக்கும். அந்த அளவிற்கு அவருடைய கேமிராவின் கண்கள் காட்சிகளை அள்ளித்தரும்


 
 
இந்த நிலையில் விஜய்சேதுபதி நடிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கி வந்த 'அநீதிக்கதைகள்' என்ற படத்தில் இருந்து திடீரென பி.சி.ஸ்ரீராம் பாதியிலேயே விலகிவிட்டார்
 
முதல்கட்ட படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திடீரென தாமதம் ஆனது. எனவே ஏற்கனவே ஒப்புக்கொண்ட அக்சயகுமாரின் இந்தி படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் கால்ஷீட் கொடுத்திருந்ததால் 'அநீதிக்கதைகள்' படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.  பி.சி.ஸ்ரீராம் கைவிட்டாலும் சமீபத்தில் விஜய்சேதுபதியின் வெற்றி படமான 'விக்ரம் வேதா' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த இ.எஸ்.விநோத் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக இருப்பார் என்று கூறப்படுகிறது.
 
முதல்முறையாக விஜய்சேதுபதி, சமந்தா ஜோடியாக நடிக்கவுள்ள இந்த படத்தின் முக்கிய வேடத்தில் பகத் பாசில் நடிக்கவுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கின்றார்.


இதில் மேலும் படிக்கவும் :