இளையராஜாவின் அண்ணன் மகன் பாவலர் சிவா காலாமானார்!
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் அவர்களின் மகன் பாவலர் சிவா காலமாகியுள்ளார். அவர் இளையராஜாவின் இசைக் குழுவில் கிடாரிஸ்ட்டாக பணியாற்றி வந்துள்ளார். பாவலர் சிவாவுக்கு வயது 60. இவருக்கு ஒரு மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர். நேற்று வீட்டில் இருந்த போது அவர் நெஞ்சுவலி ஏற்பட்டு இயற்கை எய்தியுள்ளார்.
இவரின் மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இளையராஜா சகோதரர்களில் மூத்தவரான பாவலர் வரதராஜன் அவரின் மற்றொரு மகனான ஹோமோ ஜோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.