வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 19 ஜூலை 2024 (13:36 IST)

கதையே வேண்டாம், தமன்னா டான்ஸ் இருந்தால் போதும்- பார்த்திபன் சொன்ன சர்ச்சைக் கமெண்ட்!

வித்தியாச இயக்குனர் பார்த்திபன் கடந்த ஆண்டு இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்து வெளியிட்டார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவர் இயக்கியுள்ள டீன்ஸ் என்ற படம் இந்தியன் 2 படத்தோடு ரிலீஸ் ஆனது.

அதனால் முதல் நாளில் இந்த படத்துக்கு பெரியளவில் ரசிகர்கள் கூட்டம் இல்லை. ஆனால் இந்தியன் 2 படத்துக்கு தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைக்க ஆரம்பித்துள்ள நிலையில் மெல்ல மெல்ல இந்த படத்துக்கான காட்சிகள் பல மல்ட்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் காட்சிகள் அதிகமாக்கப்பட்டுள்ளன. இப்போது படத்துக்கு டீசண்டான கூட்டம் வர ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் படத்தின் ப்ரமோஷனுக்காக அவர் அளித்த நேர்காணலில் “ இப்போதெல்லாம் ஒரு படம் ஹிட்டாகவேண்டும் என்றால் கதையே தேவையில்லை. தமன்னாவை வைத்து ஒரு டான்ஸ் பாடல் வைத்தால் போதும்.” என்று கூறியுள்ளார். ஜெயிலர் படத்தில் தமன்னாவின் காவாலா பாடல் மிகப்பெரிய ஹிட்டான நிலையில் பார்த்திபனின் இந்த கமெண்ட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.