1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 17 மார்ச் 2023 (14:47 IST)

இந்த ஆண்டின் மெஹா பிளாக்பஸ்டர் பதான் படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்!

ஷாரூக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பலர் நடித்து சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் பதான். 4 ஆண்டுகள் இடைவெளியில் ஷாரூக்கான் நடித்துள்ள படம் என்பதால் இதன் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியான பதான் தொடர் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில் இப்போது பதான் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக 1000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது பதான் திரைப்படம் இந்தியில் மட்டும் 526 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் அதிக வசூல் செய்த இந்தி படம் என்ற சாதனையை பாகுபலி 2 விடம் இருந்து தன்வசமாக்கியுள்ளது பதான். கடந்த சில ஆண்டுகளாக தோல்விப் படங்களாக கொடுத்து வந்த ஷாருக் கானுக்கு பதான் படம் ரி எண்ட்ரி படமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் ரிலீஸ் ஆகி 50 நாட்களை கடந்துள்ள நிலையில் இந்த படம் மார்ச் 22 ஆம் தேதி பிரபல ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது.