பசுபதி நடித்த தண்டட்டி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
கடந்த மாதம் வெளியான திரைப்படங்களில் நல்ல விமர்சனங்களைப் பெற்ற திரைப்படமாக அமைந்தது தண்டட்டி. இன்றைய கிராமப்புற வாழ்வை இயல்பாக சொல்லியதாக விமர்சகர்கள் பாராட்டி இருந்தனர். ஆனால் இந்த திரைப்படம் திரையரங்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை.
இந்நிலையில் இப்போது தண்டட்டி திரைப்படம் ஜுலை 14 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் நான்கு தென்னிந்திய மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பசுபதி நடிப்பில் உருவான தண்டட்டி படத்தை ராம் சங்கையா இயக்கியிருந்தார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. கே எஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்த இந்த படத்தில் மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் விவேக் பிரசன்னா மற்றும் ரோகினி ஆகியோர் நடித்திருந்தனர்.